TamilsGuide

பரபரப்பான சாலையில் எவ்வித பதற்றமும் இன்றி டாக்சி ஓட்டும் மூதாட்டி

பாகிஸ்தானின் பஞ்சாப் மாகாணம் ராவல்பிண்டி நகரைச் சேர்ந்தவர் ஜாகிதா காஸ்மி, 67 வயதான இவருக்கு 7 மகன்கள் உள்ளனர். 37 ஆண்டுகளுக்கு முன்பு கணவரை இழந்த இவர் தனது குழந்தைகளை காப்பாற்றுவதற்காக டாக்சி ஓட்டினார். இதன்மூலம் அவர் நாட்டின் முதல் பெண் டாக்சி டிரைவர் என்ற பெருமைக்குச் சொந்தக்காரர் ஆனார்.

இந்தநிலையில் ராவல்பிண்டி நகரின் பரபரப்பான சாலையில் எவ்வித பதற்றமும் இன்றி ஜாகிதா டாக்சியை ஓட்டிச் சென்றார். இதனை அவரது மகன் மஜித் வீடியோவாக எடுத்து `தாய்தான் ஒருவரது முதல் மற்றும் என்றென்றும் சிறந்த தோழி' என்ற குறிப்புடன் சமூகவலைதளத்தில் பதிவிட்டார்.

இந்த வீடியோவை 2 கோடிக்கும் அதிகமானோர் பார்வையிட்டு தங்களது விருப்பத்தை தெரிவித்து உள்ளனர்.
 

Leave a comment

Comment