TamilsGuide

மறக்க முடியாத மக்கள் திலகம்

எம்.ஜி.ஆர் அவர்களுக்கும் மற்ற அரசியல் தலைவர்களும் இருந்த மிகப் பெரிய வித்தியாசம்...

இங்கே வீடியோ கான்ஃபரன்ஸ் மூலம் பேசி விளம்பரத்திற்காக, பொது மக்களின் கடினமான நேரத்தில் கூட, தன்னை முன்னிறுத்திக் கொள்ளும் தலைவர்களை நிறைய பார்க்கிறோம்...

பிப்ரவரி 4, 1985 மக்கள் திலகம், தன்னுடைய இரு சிறுநீரகங்களும் பழுதடைந்து அமெரிக்காவின் ப்ரூக்ளின் மருத்துவமனையில் சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை முடிந்து பிறகு தன் வீட்டை அடைகிறார்...

ராமாவரம் தோட்டத்தில் பெரும் கூட்டம். தன்னை பார்க்க மட்டுமல்ல, தங்கள் குறைகளை மனுவாக புரட்சித் தலைவரிடம் கொடுக்கவும் கூட்டம் கூடியிருக்கிறது...

முதல்வர் நினைத் திருந்தால் தன் உடல் நிலையை, வெளியில் அதிக நேரம் இருந்தால் தொற்று பரவும் அபாயதை காரணம் காட்டி பொதுமக்களை திரும்ப அனுப்பியிருக்கலாம்...

ஆனால் அவ்வாறு செய்யவில்லை மக்கள் திலகம் தன்னை கண்குளிர பார்க்கவும், பேசவும், தன்னை குடும்பத்தில் ஒருவனாக நினைத்து குறைகளை சொல்லவும் வந்த பொதுமக்களை/தொண்டர்களை...

தன் உடல்நிலையை காரணம்காட்டி ஏமாற்ற விரும்பவில்லை மக்கள் திலகம். சளைக்காமல் காம்பவுண்ட் சுவர்தாண்டி மூங்கில் தட்டி அருகே நின்று மக்களின் மனுக்களை பெறுகிறார் மக்களிடம் உற்சாகமாக பேசுகிறார்...

ஒரு கட்டத்தில் உடல் சோர்ந்து தன்னை தாங்கி பிடிக்க வேண்டிய கட்டத்துக்கு சென்று விடுகிறார் மக்கள் திலகம். (முதல் படம்). அப்போதும் கூட அசரவில்லையே மக்கள் திலகம் எம்.ஜி.ஆர் அவர்கள்...

தன் உதவியாளரை நாற்காலியை கொண்டுவர செய்து சற்று ஆசுவாசபடுத்திக் கொண்டு மீண்டும் மனுக்களை பெறுகிறார் மக்கள் திலகம்...

மண்ணை விட்டு மறைந்து 37 வருடம் பிறகும் கூட மக்கள் மனதில் இறவாத் தலைவராய் சிம்மாசனம் போட்டு மக்கள் திலகம் அமர்ந்திருக்கிறார் என்றால்...

அவர் மக்களுடன் குறிப்பாக அடித்தட்டு மக்களுடன் ஏற்படுத்திக் கொண்ட பிரிக்கமுடியாத தொடர்பு தான் புரட்சித் தலைவரின் மறைவிற்கு பிறகு தான் தமிழகத்தில் ஜாதிக் கட்சிகள் புற்றீசல் போல பெருக ஆரம்பித்தது.

அன்புடன் என்றும் வள்ளலின் புகழ் பாடு மதுரை கோல்டு இராமச்சந்திரன்.

Leave a comment

Comment