TamilsGuide

மட்டக்களப்பு-கல்முனை பிரதான வீதியில் கோர விபத்து

மட்டக்களப்பு -கல்முனை பிரதான வீதியில் காத்தான்குடி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட ஆரையம்பதி செல்வாநகர் மத்தி பிரதான வீதியில் இடம் பெற்ற விபத்தில் முச்சக்கர வண்டி ஒன்றும் மோட்டார் சைக்கிளும் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது.

இதில் மோட்டார் சைக்கிளில் பயணித்த இருவரும் முச்சக்கர வண்டி சாரதியும் படுகாயமடைந்த நிலையில் ஆரையம்பதி பிரதேச வைத்திய சாலையில் அனுமதிக்கப்பட்டு, பின்னர் மேலதிக சிகிச்சைகளுக்காக மட்டக்களப்பு போதனா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.

விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளை காத்தான்குடி போக்குவரத்து பொலீசார் முன்னெடுத்து வருகின்றனர்.
 

Leave a comment

Comment