TamilsGuide

உத்தியோகப்பூர்வ நாணய மாற்று விபரம்

அமெரிக்க டொலருக்கு நிகரான இலங்கை ரூபாவின் பெறுமதியானது நேற்றைய தினத்துடன் ஒப்பிடுகையில் இன்று (10) அதிகரித்துள்ளது.

இலங்கை மத்திய வங்கியின் உத்தியோகப்பூர்வ நாணய மாற்று விபரங்களுக்கு அமைவாக,

அமெரிக்க டொலர் ஒன்றின் கொள்வனவு மற்றும் விற்பனை பெறுமதியானது இன்று முறையே 290.64 ரூபாவாகவும், 299.20 ரூபாவாகவும் உள்ளது.

நேறறைய தினம் (09) அமெரிக்க டொலர் ஒன்றின் கொள்வனவு மற்றும் விற்பனை பெறுமதியானது முறையே 291.75 ரூபாவாகவும் 300.31 ரூபாவாகவும் காணப்பட்டது.

வளைகுடா நாணயங்கள் உட்பட ஏனைய பல பிரதான நாடுகளின் நாணயங்களுக்கு எதிராகவும் ரூபாவின் பெறுமதி இன்று உயர்ந்துள்ளது.
 

Leave a comment

Comment