சவுதி அரேபியாவில் மீண்டும் கனமழை பெய்து வருவதால் பல நகரங்கள் வெள்ளத்தினால் முழ்கி காட்சியளிக்கின்றன.
பாலைவன நாடான சவுதி அரேபியாவில் ஆண்டிற்கு 10 செ.மீ மழை பெய்வதே அரிதான ஒன்று.
இவ்வாறான சூழலில் பருவ நிலை மாற்றம் காரணமாக அங்கு சமீபத்தில் கனமழை வெளுத்து வாங்கியுள்ளது.
கடந்த ஆண்டு ஏப்ரல் மாதம் பெய்த கன மழையால் சாலைகள் முழுவதும் ஆறுகள் போல காட்சியளித்தன. குடியிருப்புகளுக்குள் வெள்ளநீர் புகுந்ததால் மக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டனர்.
கட்டிடங்கள், வாகனங்கள், சாலைகள் உள்ளிட்டவை பாதிக்கப்பட்டதோடு ஓமனில் 21 பேரும் அரபு அமீரகத்தில் 4 பேரும் உயிரிழந்தனர்.
இவ்வாறு இருக்கையில், கடந்த 2 நாட்களில் சவுதியில் 4.9 செ.மீ மழையும், ஜெட்டா நகரில் 3.8 செ.மீ மழையும் பெய்துள்ளது.
மேலும் இந்த வாரம் முழுவதும் மிதமானது முதல் இடியுடன் கூடிய கனமழை பெய்யக்கூடும் என அந்நாட்டு வானிலை மையம் தெரிவித்துள்ளது.
கிழக்கு மாகணத்தில் ஆலங்கட்டி மழை மற்றும் துசியான காற்றுடன் கூடிய மழை பெய்யக்கூடும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கனமழை காரணமாக மக்கள் பொது இடங்களுக்கு செல்ல கூடாது என தடை விதிக்கப்பட்டுள்ளது. மக்கள் எச்சரிக்கயாக இருக்குமாறும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.