TamilsGuide

கனடிய நிறுவனமொன்லிருந்து பணி நீக்கப்பட்ட பணியாளர்கள் - தமிழர்களும் பாதிப்பு 

கனடாவை மையமாக கொண்டு இயங்கி வரும் பால் பான உற்பத்தி நிறுவனம் ஒன்று திடீரென பணியாளர்களை பணி நீக்கம் செய்துள்ளது.

சுமார் 150 பணியாளர்கள் இவ்வாறு பணி நீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.

இவ்வாறு பணி நீக்கம் செய்யப்பட்டதனால் சில தமிழர்கள் உள்ளிட்ட பல்வேறு குடியேறிகள் தொழில்களை இழக்க நேரிட்டுள்ளது.

நிறுவனத்தின் தீர்மானத்திற்கு எதிர்ப்பை வெளியிட்டு பணியாளர்கள் போராட்டமொன்றை முன்னெடுத்துள்ளனர்.

ஜொரிகி பிவரெஜேஸ் என்ற நிறுவனம் கனடா மற்றும் அமெரிக்காவில் இயங்கி வருகின்றது. இவ்வாறு இயங்கி வரும் நிறுவனத்தின் பணியாளர்களே பணி நீக்கப்பட்டுள்ளனர்.

இந்த நிறுவனத்தின் பால் பான உற்பத்திகளை அருந்திய மூன்று பேர் உயிரிழந்ததுடன் பலர் நோய்வாய்ப்பட்டிருந்தனர்.

இந்த சம்பவங்களை தொடர்ந்து பிக்கரிங்கில் அமைந்துள்ள இந்த நிறுவனத்தின் உற்பத்தி சாலை மூடப்பட்டது.

இந்த நிறுவனம் பணியாளர்களுக்கான சம்பளம், ஏனைய கொடுப்பனவுகள் மற்றும் ஏனைய நிறுவனங்களுக்கான கடன்களுமாக சுமார் 200 மில்லியன் டாலர் செலுத்த வேண்டி இருப்பதாக தெரிவிக்கப்படுகிறது.

இதேவேளை, இந்த நிறுவனத்தில் நான்கு ஆண்டுகளாக பணிபு பணிபுரிந்து வந்த தாம், திடீரென எடுக்கப்பட்ட தீர்மானத்தினால் பாதிக்கப்பட்டுள்ளதாக, இங்கு பணிபுரியும் ராஜேந்திரம் ஆறுமுகம் என்பவர் தெரிவிக்கின்றார். 

Leave a comment

Comment