TamilsGuide

தலைவன் தலைவன் தான்.. தொண்டன் தொண்டன் தான் -ஏ.ஆர் ரகுமானை புகழ்ந்த அனிருத்

ரெட் ஜெயன்ட் மூவிஸ் தயாரிப்பில் இயக்குநர் கிருத்திகா உதயநிதி இயக்கியுள்ள திரைப்படம் காதலிக்க நேரமில்லை. இப்படத்தில் ஜெயம் ரவி, நித்யா மேனன் ஆகியோர் முதன்மை பாத்திரங்களில் நடித்துள்ளனர். இந்தப் படத்திற்கு ஏ.ஆர். ரகுமான் இசையமைத்துள்ளார்.

மேலும், இப்படத்தில் யோகி பாபு, லால், வினய், லக்ஷ்மி ராமகிருஷ்ணன், பாடகர் மனோ, TJ பானு, ஜான் கோகேன், வினோதினி உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். கேவ்மிக் ஆரி ஒளிப்பதிவில் உருவாகியுள்ள இப்படத்திற்கு லாரன்ஸ் கிஷோர் படத்தொகுப்பை மேற்கொள்கிறார். திரைப்படம் வரும் பொங்கலை முன்னிட்டு வரும் ஜனவரி 14 ஆம் தேதி வெளியாகவுள்ளது. படத்தின் டிரெய்லர் சமீபத்தில் வெளியாகி மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது.

படத்தின் இசை வெளியீட்டு விழா நேற்று நடைப்பெற்றது அதில் படத்தில் நடித்தவர்கள், ஏ.ஆர் ரகுமான், அனிருத், மிஷ்கின், ஜெயம் ரசி, நித்யா மேனன், வினய் மற்றும் பலர் கலந்து கொண்டனர். அப்பொழுது மேடையில் பேசிய அனிருத் " இந்த சோஷியல் மீடியா-ல அடுத்த ஏ.ஆர் ரகுமான் நான் தான் அப்படி இப்படி-ன்னு நிறைய பேர் சொல்லிட்டு இருக்காங்க. நான் திரும்ப திரும்ப சொல்றேன் தலைவன் தலைவன் தான் தொண்டன் தொண்டன் தான் . லவ் யூ சார் " என ஏ.ஆர் ரகுமானைப் பார்த்து கூறினார். இந்த காணொளி தற்பொழுது இணையத்தில் அதிகம் பரவி வருகிறது.

Leave a comment

Comment