TamilsGuide

விஷ்ணு வரதன் இயக்கிய நேசிப்பாயா படத்தின் டைட்டில் டிராக் வெளியானது

நீண்ட இடைவேளிக்கு பிறகு மீண்டும் விஷ்ணுவரதன் தமிழில் நேசிப்பாயா படத்தை இயக்கியுள்ளார்.

இப்படத்தில் ஆகாஷ் முரளி மற்றும் அதிதி சங்கர் முன்னணி கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளனர். நடிகர் அதர்வாவின் தம்பியாவார் ஆகாஷ் முரளி. படத்தின் ஃபர்ஸ்ட் லுக் சில மாதங்களுக்கு முன் வெளியானது. இப்படத்தின் மூலம் ஆகாஷ் முரளி தமிழ் சினிமாவில் கதாநாயகனாக அறிமுகமாகிறார்.

படத்தின் டிரெய்லர் சமீபத்தில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது. படத்தின் முதல் பாடலான `தொலஞ்ச மனசு' என்ற பாடல் யுவன் ஷங்கர் ராஜா குரலில் கடந்த மாதம் வெளியானது. இவர்களுடன் குஷ்பு, சரத்குமார், பிரபு, ராஜா, கல்கி, ஷிவ் பண்டிட் மற்றும் பலர் நடித்துள்ளனர்.

திரைப்படம் வரும் ஜனவரி 14 ஆம் தேதி வெளியாகவுள்ளது. இப்படம் ஆகாஷ் முரளிக்கு ஒரு மிகப்பெரிய தொடக்கமாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிலையில் படத்தின் டைட்டில் டிராக்கான நேசிப்பாயா வீடியோ பாடலை படக்குழு வெளியிட்டுள்ளது. இப்பாடலின் வரிகளை விக்னேஷ் சிவன் எழுதியுள்ளார். இப்பாடலை யுவன் ஷங்கர் ராஜா, ஜேவட் அலி, பெல்லாஷிண்டே இணைந்து பாடியுள்ளனர்.
 

Leave a comment

Comment