TamilsGuide

ரொறன்ரோ மக்களுக்கு மகிழ்ச்சி தகவல்

 கனடாவின் ரொறன்ரோ பொது போக்குவரத்து சேவை கட்டணங்கள் தொடர்பில் மகிழ்ச்சி செய்தி வெளியிடப்பட்டுள்ளது.

இந்த ஆண்டில் போக்குவரத்து கட்டணங்கள் அதிகரிக்கப்படாது என அறிவிக்கப்பட்டுள்ளது.

றொன்ரோ நகரின் முதல்வர் ஒலிவியா சொளவ் இந்த விடயத்தை தெரிவித்துள்ளார்.

மக்கள் எதிர்நோக்கி வரும் கொள்வனவு இயலுமை பிரச்சனைகளை கருத்தில் கொண்டு இவ்வாறு கட்டண அதிகரிப்பினை ரத்து செய்ய தீர்மானித்ததாக அவர் தெரிவித்துள்ளார்.

இதன்படி தொடர்ச்சியாக இரண்டாவது ஆண்டிலும் டிடிசி பொதுப் போக்குவரத்து சேவை கட்டடங்கள் மாற்றம் இன்றி காணப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

பொதுப் போக்குவரத்து சேவையை மேலும் தரம் உயர்த்துவதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் என அவர் தெரிவித்துள்ளார்.

வயது வந்தவர்களுக்கான கட்டணம் 3.30 டாலர்களாகவும் முதியவர்களுக்கான கட்டணம் 2.25 டொலர்களாகவும், இளையோருக்கான கட்டணம் 2.35 டொலர்களாகவும் காணப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. 
 

Leave a comment

Comment