TamilsGuide

விஷாலின் இந்த நிலைமை, ஆர்யா செய்த செயல் - இன்ப அதிர்ச்சியில் ரசிகர்கள்

நடிகர் விஷால் நடிப்பில் கடைசியாக வெளிவந்து மாபெரும் அளவில் வெற்றியடைந்த திரைப்படம் மார்க் ஆண்டனி. அதன் பின் இவர் நடிப்பில் ரத்னம் திரைப்படம் வெளியானது ஆனால் எதிர்பார்த்த வரவேற்பை பெறவில்லை.

அடுத்ததாக விஷால் கைவசம் துப்பறிவாளன் 2 மாற்றும் மதகஜராஜா ஆகிய படங்கள் உள்ளது. இதில், மதகஜராஜா படம் பொங்கல் பண்டிகை முன்னிட்டு ரிலீஸ் ஆகிறது.

அதன் ப்ரோமோஷன் நிகழ்ச்சியில் கலந்துகொண்ட விஷால் மேடையில் நடுங்கிக்கொண்டே பேசியதை பார்த்து பலரும் ஷாக் ஆகி இருக்கின்றனர்.

ஆர்யாவின் செயல்

இந்நிலையில், விஷாலின் நெருங்கிய நண்பராக வலம் வரும் ஆர்யா அவரின் உடல்நிலையை சரிசெய்ய பலவிதமான முயற்சியில் ஈடுபட்டுள்ளார்.

அதாவது, நண்பன் விஷாலை வெளியே தன்னுடன் அழைத்து செல்வது. அவருடன் நேரத்தை செலவிடுவது. என அனைத்து விதமான முயற்ச்சிகளையும் செய்து வருகின்றார் என கூறப்படுகிறது.

மேலும், ஆர்யாவின் அண்ணா நகர் ஹோட்டலில் அவருக்கு விருந்து உணவு வழங்கப்பட்டதாகவும் தகவல் வெளியாகி உள்ளது. இவர்களின் இந்த நட்பை பார்த்து இன்ப அதிர்ச்சி அடைந்த ரசிகர்கள் இப்படி ஒரு நட்பா என்று பாராட்டி வருகின்றனர். 
 

Leave a comment

Comment