TamilsGuide

இயக்குநர் ஷங்கரின் அடுத்த மூன்று படங்கள் - வேற லெவல் லைன் அப் 

பிரம்மாண்ட இயக்குநர் ஷங்கர் இயக்கத்தில் நாளை கேம் சேஞ்சர் திரைப்படம் வெளிவரவுள்ளது. கடந்த ஆண்டு வெளிவந்த இந்தியன் 2 படம் எதிர்பார்த்த வரவேற்பை பெறவில்லை என்பதால், கேம் சேஞ்சர் படத்தின் மீது மாபெரும் எதிர்பார்ப்பு உள்ளது.

கண்டிப்பாக இது ஷங்கருக்கு மாபெரும் வெற்றி படமாக அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது. கேம் சேஞ்சர் படத்தை இந்தியன் 3 படத்திற்கான இறுதிக்கட்ட தயாரிப்பு பணிகளில் ஷங்கர் ஈடுபடவுள்ளார்.

இந்த நிலையில், இதற்கடுத்து ஷங்கர் இயக்கத்தில் உருவாகவிருக்கும் மூன்று திரைப்படங்கள் குறித்து லேட்டஸ்ட் தகவல் வெளியாகியுள்ளது. அதை பற்றி இந்த பதிவில் பார்க்கலாம் வாங்க.

இந்தியன் 3 படத்திற்கு பின், வேல்பாரி நாவலை மையமாக வைத்து படம் எடுக்கவுள்ளார் ஷங்கர். இதுகுறித்து கடந்த ஆண்டில் இருந்தே தொடர்ந்து பல்வேறு அப்டேட் வெளிவந்து கொண்டு இருக்கிறது. ஆனால், தயாரிப்பு நிறுவனம், ஹீரோ மற்ற டெக்னீஷன்கள் யார்யார் என்பது குறித்து அறிவிப்பு வெளிவரவில்லை.

வேல்பாரி படத்தை தொடர்ந்து ஹாலிவுட் தரத்தில் சைன்ஸ் ஃபிக்ஷன் படத்தை இயக்கவுள்ளாராம். மேலும் ஸ்பை திரில்லர் கதைக்களத்தில் ஒரு படத்தை இயக்கப்போவதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. 
 

Leave a comment

Comment