TamilsGuide

மகாராஜா கூட்டணியில் இணையும் பிரபல இயக்குனர்

நடிகர் விஜய் சேதுபதி மற்றும் மகாராஜா படத்தின் தயாரிப்பாளர் மீண்டும் இணையவுள்ளனர். மகாராஜா படத்தை ரூட், திங்க் ஸ்டுடியோஸ் மற்றும் பேஷன் ஸ்டுடியோஸ் இணைந்து தயாரித்தது. ஆனால் இந்த படத்தை பேஷன் ஸ்டுடியோஸ் மட்டும் தயாரிக்கிறது. இந்த புதிய படத்தை நேற்று இன்று நாளை படத்தின் இயக்குனர் இயக்கவுள்ளார்.

விஜய் சேதுபதியின் 50-வது படமான மகாராஜா பிளாக்பஸ்டர் ஹிட் அடித்தது. வெறும் 30 கோடிகளில் எடுக்கப்பட்ட இந்த படம் 100 கோடிக்கு மேல் வசூல் சாதனை செய்தது. இந்த படத்தை இந்தியாவில் மட்டுமல்லாது சீனாவிலும் திரையிடப்பட்டது. அந்த நாட்டு மொழியில் மொழிபெயர்க்கப்பட்டு ரிலீஸ் ஆனது. 92 கோடிகள் அந்த நாட்டில் மட்டும் வசூலித்தது.

இதேபோல நேற்று இன்று நாளை என்ற படமும் சூப்பர் ஹிட் திரைப்படமாகும். தமிழில் வெளியான சயின்ஸ் பிக்சன் திரைப்படங்களில் முக்கிய படமாகவும், ரசிகர்களின் மனம் கவர்ந்த படமாகவும் நேற்று இன்று நாளை இருந்து வருகிறது.

சயின்ஸ் பிக்சன் கதையாக இருந்தாலும் காமெடியான திரைக்கதையுடன் உருவாக்கி ரசிக்க வைத்திருப்பார் படத்தின் இயக்குநர் ஆர். ரவிக்குமார். இந்த படம் இவரது அறிமுக படமாகும்.

இந்நிலையில் நடிகர் விஜய் சேதுபதி, மகாராஜா தயாரிப்பு நிறுவனம், நேற்று இன்று நாளை இயக்குனர் ஆகிய 3 பேர் இணையும் படத்திற்கு ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.
 

Leave a comment

Comment