TamilsGuide

ஜனாதிபதி ஊடகப் பிரிவில் மாயமான 162 மில்லியன் ரூபா பெறுமதியான பொருட்கள்

கடந்த காலங்களில் 162 மில்லியன் ரூபா பெறுமதியான பொருட்கள் ஜனாதிபதி ஊடகப் பிரிவில் இருந்து காணாமல் போனமை தொடர்பில் விரிவான விசாரணை மேற்கொண்டு உண்மைகளை முன்வைக்குமாறு குற்றப் புலனாய்வுத் திணைக்களத்துக்கு (CID) கோட்டை நீதிவான் நிலுபுலி லங்காபுர உத்தரவிட்டுள்ளார்.

இது தொடர்பில் தாக்கல் செய்யப்பட்ட முறைப்பாட்டின் அடிப்படையில் விசாரணைகளை ஆரம்பித்துள்ளதாகவும், விசாரணையின் முன்னேற்றம் குறித்து நீதிமன்றத்திற்கு விளக்கமளிக்க நடவடிக்கை எடுப்பதாகவும் குற்றப் புலனாய்வுப் பிரிவினர் நீதிமன்றில் தெரிவித்ததையடுத்து நேற்று இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பில் சம்பந்தப்பட்ட தரப்பினரிடம் ஏற்கனவே வாக்குமூலம் பதிவு செய்யப்பட்டுள்ளதாக நீதிமன்றில் தெரிவித்த குற்றப் புலனாய்வுப் பிரிவினர், காணாமல் போன பொருட்கள் தொடர்பில் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாகவும் குறிப்பிட்டது.

அதேநேரம், தவறுதலாக பதிவாகியுள்ள பொருட்களின் பட்டியல் நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கப்படும் என்றும் கூறியது.
 

Leave a comment

Comment