TamilsGuide

அரசியல் கைதிகளை விடுவிக்க வேண்டும்-புதுக்குடியிருப்பில் கையெழுத்து போராட்டம்

அரசியல் கைதிகளின் விடுதலையை வலியுறுத்தி முல்லைத்தீவு புதுக்குடியிருப்பில் கையெழுத்து போராட்டம் இன்று இடம்பெற்றதுள்ளது

பாேராளிகள் நலன்புரி சங்கத்தின் ஏற்பாட்டில் புதுக்குடியிருப்பு நகர் பகுதியில் கையெழுத்து போராட்டம் பல்வேறு தரப்பினரதும் பேராதரவுடன் இடம்பெற்றது.

பயங்கரவாத தடை சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு நீண்ட காலமாக தடுத்து வைக்கப்பட்டுள்ள அரசியல் கைதிகளையும், புனர்வாழ்வு அளிக்கப்பட்டு சமூகமயப்படுத்தப்பட்ட பின்னர் நீதி மன்றத்தினால் விடுதலை செய்யப்பட்ட பின்பும் மீண்டும் கைது செய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டுள்ள போராளிகளையும், புதிய அரசாங்கம் விடுவிக்க வேண்டும் என வலியுறுத்தி கையெழுத்துப் போராட்டம் இடம்பெற்றது.

இதில் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சி.சிவமோகன், கரைச்சி பிரதேச சபையின் முன்னாள் உறுப்பினர் ச.ஜீவராசா , வர்த்தக சங்க தலைவர் த.நவநீதன், கலைஞர் மாணிக்கம் ஜெகன், போராளிகள் நலன்புரி சங்கத்தினர், பொது அமைப்புகளின் பிரதிநிதிகள், சமூக அமைப்புகளின் பிரதிநிதிகள், பொதுமக்கள், வர்த்தக சங்கத்தினர், பாடசாலை மாணவர்கள் எனப் பலரும் கலந்து கொண்டு கையெழுத்திட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Leave a comment

Comment