TamilsGuide

மத்திய கிழக்கு அனைத்திலும் மோதல் வெடிக்கும் - ஹமாஸுக்கு கெடு விதித்த டிரம்ப்

அமெரிக்க அதிபராகத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள டொனால்டு டிரம்ப் வரும் ஜனவரி 20 ஆம் தேதி பதவி ஏற்க உள்ளார். தான் பதவி ஏற்பதற்குள் காசாவில் வைத்திருக்கும் பணயக்கைதிகளை ஹமாஸ் விடுவிக்காவிட்டால், மத்திய கிழக்கில் மோதல் வெடிக்கும் என்று டிரம்ப் எச்சரித்துள்ளார்

செவ்வாயன்று தனது புளோரிடா தோட்டமான மார்-ஏ-லாகோவில் ஒரு மணிநேர செய்தி மாநாட்டில் உரையாற்றிய டொனால்டு டிரம்ப், நான் பதவியேற்கும் நேரத்தில் அவர்கள் திரும்பி வரவில்லை என்றால், மத்திய கிழக்கில் அனைத்து நரகங்களும் வெடிக்கும், இது ஹமாஸுக்கு நல்லதல்ல, வெளிப்படையாக யாருக்கும் நல்லது அல்ல. இஸ்ரேல் மீது ஹமாஸ் ஒருபோதும் தாக்குதல் நடத்தி இருந்திருக்கக் கூடாது என்று தெரிவித்துள்ளார்.

மேலும் டென்மார்க்கில் உள்ள கிரீன்லாந்தை கைப்பற்ற ராணுவத்தை பயன்படுத்துவதையும் டிரம்ப் நிராகரிக்கவில்லை. மேலும் பதவியேற்றதும் மெக்சிகோ வளைகுடா, அமெரிக்க வளைகுடா என்று மாற்றப்படும் என்றும் தாங்கள் அவர்களுக்கு உதவிகளை வழங்குவதால் அந்த பெயரே பொருத்தமாக இருக்கும் என்றும் அவர் தெரிவித்தார்.
 

Leave a comment

Comment