ஜரகண்டி பாட்டு பார்த்து மிரண்டுட்டேன்... அதுக்காகவே எல்லாம் தியேட்டர்ல போய் பாக்கணும் - எஸ்.ஜே சூர்யா
சினிமா
இயக்குநர் சங்கர் இயக்கத்தில் தெலுங்கு நடிகர் ராம் சரண் கதாநாயகனாக நடித்துள்ள படம் 'கேம் சேஞ்சர்'. இப்படத்தில் எஸ்.ஜே. சூர்யா, கியாரா அத்வானி, அஞ்சலி, ஸ்ரீகாந்த், சமுத்திரக்கனி உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். இப்படத்திற்கு தமன் இசையமைத்துள்ளார். இப்படம் மிகப்பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது.
பொங்கலை முன்னிட்டு இப்படம் வருகிற 10-ந்தேதி வெளியாக உள்ளது. அதனால் தற்போது இப்படத்திற்கான புரமோஷன் பணிகள் நடைபெற்று வருகிறது. படத்தின் டிரெய்லர் சமீபத்தில் வெளியாகி மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது.
சமீபத்தில் நடந்த நேர்காணல் ஒன்றில் எஸ் ஜே சூர்யா படத்தை குறித்த சுவாரசிய தகவலை கூறினார். அதில் அவர் " இத்திரைப்படத்தை மிகப்பெரிய பட்ஜெட்டில் எடுத்துள்ளனர். படன் எடுத்த செலவு மட்டுமே 400- 500 கோடி ரூபாய் இருக்கும். அது இல்லாமல் அப்பணத்தில் வட்டி இருக்கிறது. அதையெல்லாம் கணக்கு போட்டால் எங்கேயோ சென்றுவிடும். படத்தில் ஜரகண்டி என்ற பாடல் படத்தில் இருக்கிறது. நேற்று தான் அந்த பாடலை நான் திரையில் கண்டேன். அந்த ஒரு பாடலின் விஷ்வல் போது மக்கள் கொடுக்கும் டிக்கெட் காசு அதற்கு ஈடாகிவிடும். அப்படி ஒரு பிரம்மாண்டம், அந்த பாடலுக்காகவே இன்னொரு முறை நீங்கள் பார்ப்பீர்கள். பிரபு தேவாவின் கோரியோ. ராம் சரணின் நடனம். கியார அத்வானியின் அழகு என அனைத்திலும் அப்பாடல் மிகச் சிறப்பாக அமைந்துள்ளது. இது தவிர்த்து படம் முழுவதும் போன்ஸ் தான் " என்று மிகவும் மகிழ்ச்சியாக கூறியுள்ளார்.
























