கனடிய லிபரல் கட்சியின் தலைமை பதவியை பெற்றுக் கொள்ள நாடாளுமன்ற உறுப்பினர் மார்க் கார்னி முயற்சிப்பதாக தெரிவிக்கப்படுகிறது.
மார்க் கர்னி கனடிய மத்திய வங்கி ஆளுநராக கடமையாற்றியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
இவ்வாறான ஒரு பின்னணியில் அவர் லிபரல் கட்சியின் தலைமைப் பொறுப்பினை ஏற்றுக் கொள்வதற்கான முனைப்புகளில் ஈடுபட்டுள்ளார்.
தற்போதைய பிரதமரும் லிபரல் கட்சியின் தலைவருமான ஜஸ்டின் ட்ரூடோ பதவி விலகுமாறு பல்வேறு தரப்பினரும் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.
எதிர்வரும் புதன்கிழமை லிபரல் கட்சி கட்சியின் முக்கிய கூட்டம் ஒன்று நடைபெற உள்ளது.
இந்த கூட்டத்தில் பல்வேறு தீர்மானங்கள் எடுக்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. இவ்வாறான ஒரு பின்னணியில் மார்க் கர்னி லிபரல் கட்சியின் பல உறுப்பினர்களுடன் பேச்சு வார்த்தையில் ஈடுபட்டுள்ளார்.
இதேவேளை, லிபரக் கட்சிக்கான மக்கள் ஆதரவு வெகுவாக குறைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
லிபரல் கட்சிக்கான ஆதரவு 21 வீதமாகவும் கன்சர்வேட்டிவ் கட்சிக்கான ஆதரவு 47 வீதமாகவும் ஆகவும் காணப்படுகின்றது என தெரிவிக்கப்படுகிறது.
அண்மையில் நானோஸ் ஆய்வு நிறுவனத்தினால் முன்னெடுக்கப்பட்ட கருத்துக்கணிப்பு மூலம் இந்த விடயம் தெரியவந்துள்ளது.