TamilsGuide

அஜித்தின் குட் பேட் அக்லி படத்தின் மாஸ் அப்டேட்.. ரசிகர்களுக்கு காத்திருக்கும் ட்ரீட் 

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வரும் அஜித் தற்போது, மகிழ்திருமேனி இயக்கத்தில் விடாமுயற்சி மற்றும் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் குட் பேட் அக்லி என இரண்டு படத்தில் நடித்துள்ளார்.

இதில், விடாமுயற்சி படம் வரும் பொங்கல் ஸ்பெஷலாக வெளியாகும் என எதிர்ப்பார்க்கப்பட்டது, ஆனால் பட ரிலீஸ் தள்ளிப்போனதாக தயாரிப்பு குழு அறிவித்துவிட்டார்கள். இதனால் ரசிகர்கள் கடும் வருத்தத்தில் உள்ளனர்.

இப்படத்தை தொடர்ந்து அஜித், ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் நடிக்கும் குட் பேட் அக்லி படத்திற்காக சுத்தமாக தனது உடல் எடையை குறைத்து ஆளே மாறியிருக்கிறார்.

இந்த படத்தின் மீதும் ரசிகர்களுக்கு பெரும் எதிர்பார்ப்பு உள்ள நிலையில் குட் பேட் அக்லி படத்தின் பாடல் குறித்த அப்டேட் ஒன்றை கல்யாண் மாஸ்டர் பகிர்ந்துள்ளார்.

அதில், " அஜித் குமார் குட் பேட் அக்லி படத்தில் உள்ள பாடலில் செமையாக ஆட்டம் போட்டுள்ளார். அவரது நடனத்தை கண்டு ஷூட்டிங் ஸ்பாட்டில் இருக்கும் அனைவரும் ஆச்சிரியம் அடைந்தனர்.

கண்டிப்பாக இந்த பாடல் அஜித் ரசிகர்களுக்கு ஒரு ட்ரீட் ஆக அமையும். இதை தவிர்த்து என்னால் வேற எந்த தகவலையும் தற்போது கூற முடியாது" என்று தெரிவித்துள்ளார்.    

Leave a comment

Comment