நடிகர் விக்ரம் நடிப்பில் கவுதம் வாசுதேவ் மேனன் இயக்கி, தயாரித்துள்ள படம் 'துருவ நட்சத்திரம்'. முதலில் சூர்யாவை வைத்து துருவ நட்சத்திரம் படத்தை 2010 ஆம் ஆண்டு துவங்கினார் கௌதம் மேனன். ஆனால் கதையில் உடன்பாடு இல்லாத காரணத்தால் இப்படத்தில் இருந்து சூர்யா விலகினார்.
பின்பு துருவ நட்சத்திரம் கதையை ரஜினியிடம் கூறினார். ஆனால் அதுவும் நடக்கவில்லை. இறுதியாக இக்கதையை கேட்ட விக்ரம் இப்படத்தில் நடிப்பதாக ஒப்புக்கொண்டார். அதன் பிறகு 2016 ஆம் ஆண்டு இப்படம் துவங்கப்பட்டது. நிதி பிரச்சனை உட்பட பல பிரச்சனையின் காரணமாக இப்படத்தின் படப்பிடிப்பு அவ்வப்போது தடைபட்டது. இருந்தாலும் அந்த தடைகளை எல்லாம் கடந்து ஒரு வழியாக படப்பிடிப்பு முடிந்துவிட்டது. இதையடுத்து இப்படம் வெளியாவது தள்ளிக்கொண்டே போனது.
இதையடுத்து 'துருவ நட்சத்திரம்' பொங்கலுக்கு வெளியாவதாக தகவல் வெளியாகி உள்ளது. 'விடாமுயற்சி' படம் பொங்கலுக்கு வெளியாகாததால் சுமார் 10 படங்கள் பொங்கலுக்கு வெளியாக உள்ள நிலையில், 'துருவ நட்சத்திரமும் வெளியாகிறது. இதனால் ரசிகர்கள் உற்சாகத்தில் உள்ளனர்.