மெட்ராஸ் திரைப்படத்தின் மூலம் அனைவருக்கும் பரீட்சையமானவர் நடிகர் கலையரசன். அதை தொடர்ந்து பல திரைப்படங்களில் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்து மக்கள் மனதில் பதிந்துள்ளார். கடைசியாக இவர் நடிப்பில் வெளியான வாழை திரைப்படம் பெருமளவு வெற்றிப்பெற்றது. தற்பொழுது மெட்ராஸ்காரன் திரைப்படத்தில் நடித்துள்ளார். இப்படத்தில் ஷேன் நிகாம் கதாநாயகனாக நடித்துள்ளார். இப்படம் வரும் பொங்கலை முன்னிட்டு ஜனவரி 10 ஆம் தேதி வெளியாகவுள்ளது.
இதைத்தொடர்ந்து கலையரசன் அடுத்ததாக கதாநாயகனாக டிரெண்டிங் திரைப்படத்தில் நடித்துள்ளார். இப்படத்தை அறிமுக இயக்குனர் சிவராஜ் இயக்கியுள்ளார். இந்நிலையில் படத்தின் ஃபர்ஸ்ட்லுக் வெளியாகியுள்ளது.
இப்படத்தில் நாயகியாக பிரியாலயா நடித்துள்ளார். இவர் இதற்கு முன் சந்தானம் நடித்த இங்க நான் தான் கிங்கு மற்றும் குட் நைட் திரைப்படத்தில் நடித்துள்ளது குறிப்பிடத்தக்கது. இவர்களுடன் பிரேம் குமார் மற்றும் பெசண்ட் ரவி நடித்துள்ளனர். இப்படம் ஒரு வ்லாகிங் செய்யும் தம்பதிகளை பற்றிய கதையாக அமைந்துள்ளது. இப்படத்தை ராம் பிலிம் பேக்டரி புரொடக்ஷன், பேர்ஃபூட் ப்ரொடக்ஷன் இணைந்து தயாரித்துள்ளது. திரைப்படத்தின் பிற செய்திகள் விரைவில் வெளியாகும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.