TamilsGuide

சாரதி அனுமதி பத்திரம் பெறுவோருக்கான முக்கிய அறிவிப்பு

அச்சிடுவதில் ஏற்பட்ட தாமதம் காரணமாக 1,30,000 சாரதி அனுமதிப்பத்திரங்கள் இந்த மாதத்திற்குள் வழங்கப்படும் என போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் பிரதி அமைச்சர் கலாநிதி பிரசன்ன குமார குணசேன தெரிவித்தார்.

போக்குவரத்து பிரதி அமைச்சர் மற்றும் துறைமுகங்கள் மற்றும் விமான சேவைகள் பிரதி அமைச்சர் ஜனித ருவான் கொடித்துவக்கு ஆகியோர் மோட்டார் போக்குவரத்து திணைக்களத்தின் வெரஹெர வளாகத்திற்கு மேற்கொண்ட அவசர பரிசோதனை விஜயத்தின் போதே இதனைத் தெரிவித்துள்ளனர்.

இணையவழி முறையின் ஊடாக நிறுவனத்தில் சேவைகளை பேணுவதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் பிரதி அமைச்சர் பிரசன்ன குமார குணசேன தெரிவித்தார்.

இதன்போது, நிறுவனத்தின் கட்டமைப்பு மற்றும் செயற்பாடுகளை அமைச்சர்கள் ஆய்வு செய்தனர்.

தற்போதைய தொழில்நுட்ப முறைகளை நவீன, மிகவும் பயனுள்ளவிதமாக மாற்றுவதன் மூலம் அதனை மிகவும் திறமையான, சேவை சார்ந்த பொது நிறுவனமாக மாற்றுவதற்கான திட்டங்களை அறிவித்தனர்.

புதிய அரசாங்கத்தின் கொள்கையானது 2025 ஆம் ஆண்டின் இறுதிக்குள் ஒரு வரலாற்று மாற்றத்தை அடைவதாகும் என்றும் அமைச்சர்கள் வலியுறுத்தினார்கள்.

இந்த அபிலாஷைகளை நனவாக்க தேவையான நடவடிக்கைகளை அமுல்படுத்துவதற்கான தமது அர்ப்பணிப்பை அவர்கள் எடுத்துரைத்தனர்.

கட்டிடங்கள் கட்டுவது போன்ற பௌதீக உட்கட்டமைப்பு மேம்பாட்டில் மட்டும் கவனம் செலுத்தாமல், சேவை வழங்கலின் திறனை மேம்படுத்த மனித வளம் மற்றும் திறன் மேம்பாட்டிற்கு முன்னுரிமை அளிப்பதை அரசாங்கம் நோக்கமாகக் கொண்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளனர்.
 

Leave a comment

Comment