TamilsGuide

பொங்கல் ரேசிலிருந்து விலகிய 2K லவ் ஸ்டோரி

சுசீந்திரன் இயக்கி உள்ள படம் '2K லவ் ஸ்டோரி'. இப்படத்தில் கதாநாயகனாக ஜெகவீர் அறிமுகமாகி உள்ளார். மேலும் இப்படத்தில் மீனாட்சி கோவிந்தராஜன், பால சரவணன் , அந்தோணி பாக்யராஜ் , ஜெயப்பிரகாஷ் , வினோதினி வைத்தியநாதன், ஜி. பி. முத்து உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள். இப்படத்துக்கு டி.இமான் இசையமைத்துள்ளார். சுசீந்திரன் - இமான் இணைந்துள்ள 10-வது திரைப்படம் இதுவாகும்.

2K தலைமுறையின் காதல், நட்பு என அவர்களின் வாழ்க்கையை பிரதிபலிக்கும் படமாக இப்படம் உருவாகி உள்ளது. மேலும், வெட்டிங் போட்டோகிராபி எடுக்கும் இளைஞர்களின் வாழ்வில் நடக்கும் சம்பவங்களை அடிப்படையாக கொண்டு படத்தின் திரைக்கதை அமைந்துள்ளது. இப்படத்தின் படப்பிடிப்பு கோவை மற்றும் சென்னையில் நடைபெற்றது. இந்தத் திரைப்படத்தின் டீசர் -ட்ரெய்லர்- பாடல்கள் -ஆகியவை வெளியாகி பெரும் வரவேற்பை பெற்றது.

இதையடுத்து வருகிற 10-ந்தேதி உலகமெங்கும் வெளியாகும் என அறிவிக்கப்பட்ட நிலையில், இப்படம் பொங்கலுக்கு வெளியாகாது என அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால் ரசிகர்கள் ஏமாற்றம் அடைந்துள்ளனர்.

பொங்கல் பண்டிகைக்கு அஜித்தின் 'விடாமுயற்சி' மற்றும் முன்னணி நடிகர்களின் படங்கள் எதுவும் வெளியாகாததால் '2K லவ் ஸ்டோரி' உள்பட 11 படங்கள் திரைக்கு வரும் என அறிவிப்பு வெளியானது. இந்நிலையில், '2K லவ் ஸ்டோரி' விலகியதை அடுத்து மற்ற படங்கள் வெளியாக உள்ளன.
 

Leave a comment

Comment