TamilsGuide

மீண்டும் சீனா வைரஸ் தொடர்பில் அவதானம்-இலங்கை தொற்றுநோயியல் திணைக்களம்

சீனாவில் பரவி வருவதாக கூறப்படும் வைரஸ் தொடர்பில் அவதானம் செலுத்தி வருவதாக இலங்கை தொற்றுநோயியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

இது தொடர்பான தகவல்களை இன்று இடம்பெறும் ஆய்வின் பின்னர் ஊடகங்களுக்கு தகவல்களை வழங்கவுள்ளதாகவும் தொற்றுநோய் தடுப்புப் பிரிவு சுட்டிக்காட்டியுள்ளது.

கொவிட் -19 வைரஸ் பரவலுக்கு பிறகு சுமார் ஐந்து வருடங்களுக்குப் பிறகு, சீனாவில் பல வைரஸ்கள் பரவி வருவதாக வெளிநாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

இந்நிலையில், சீனாவில் HMPV (Human Metapneumo Virus) என்ற வைரஸால் சுவாச நோய் அங்கு வேகமாகப் பரவி வருவதோடு இது கொவிட்-19 அறிகுறிகளைப் போலவே இருக்கும் எனக் கூறப்படுகிறது.

இந்த வைரஸானது 14 வயதுக்குட்பட்டவர்களை அதிகளவில் தாக்குவதாகக் கூறப்படுகிறதுட ன் இருமல், காய்ச்சல், மூக்கடைப்பு மற்றும் மூச்சுத்திணறல் ஆகியவை இந்த வைரஸின் அறிகுறிகளாகும் என தெரிவிக்கப்படுகிறது.

இந்நிலையில், தற்போது சீனாவில் உள்ள பல வைத்தியசாலைகள் இன்ஃப்ளூவன்சா ஏ, மைக்கோபிளாஸ்மா நிமோனியா மற்றும் கொவிட் -19 நோயாளிகளால் நிரம்பியுள்ளன என வெளிநாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன
 

Leave a comment

Comment