TamilsGuide

திருகோணமலையில் இந்தியா சோலார் திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து ஆர்ப்பாட்டம்

திருகோணமலை முத்து நகர் விவசாயக்காணிகளை இந்திய சோளார் திட்டத்திற்கு வழங்குவதற்கு எதிர்ப்பு தெரிவித்து இன்று திருகோணமலை பிரதேச செயலகத்திற்கு முன்பாக ஆர்ப்பாட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது

குறித்த முத்து நகர் கிராமத்தில் பல வருட காலமாக தாம் இரு போக விவசாய நடவடிக்கைகளில் ஈடுபட்டு வரும் விவசாய காணிகளும் காணப்படுவதாகவும் அவர்கள் தெரிவித்தனர்.

இருப்பினும் குறித்த காணிகளை துறைமுக அதிகாரசபைக்கு சொந்தமான காணி என வர்த்தமாணியின் அடிப்படையில் கையகப்படுத்திய அரச இயந்திரம் தற்போது அதனை இந்தியா சோலார் திட்டத்திற்கு வளங்க திட்டமிட்டிருப்பதாக அறியக்கிடைத்திருப்பதாகவும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் தெரிவித்தனர்.

அத்துடன் குறித்த காணிகள் விடுவிக்கப்படவேண்டும் அங்கு காணப்படும் குளங்கள் புனரமைத்து தரப்படவேண்டும் எனும் கோரிக்கைகள் அடங்கிய மஹஜர் ஒன்றும் திருகோணமலை மாவட்ட
நாடாளுமன்ற உறுப்பினர்களான ரோஷன் அக்மீமன மற்றும் சன்முகம் குகதாசன் ஆகியோரிடம் வழங்கிவைக்கப்பட்டிருந்தமையும் குறிப்பிடத்தக்கது
 

Leave a comment

Comment