மலர்ந்துள்ள இந்த 2025 ஆம் ஆண்டில் வீடு கொள்வனவு செய்வது தொடர்பில் தகவல் வெளியிடப்பட்டுள்ளது.
கடந்த சில ஆண்டுகளாகவே கனடாவில் வீடு ஒன்றை கொள்வனவு செய்வது தொடர்பில் சவால் மிக்கதாகவே காணப்படுகின்றது.
அடகு கடன் தொடர்பான சட்ட விதிகளில் மாற்றம் மற்றும் கடன் வட்டி விகிதங்களில் மாற்றம் போன்ற ஏதுக்களினால் வீடு கொள்வனவு செய்வதற்கான சாத்தியங்கள் காணப்படும் என தெரிவிக்கப்படுகிறது.
எவ்வாறு எனினும் வீட்டுச் சந்தை பொதுவாக போட்டித் தன்மையுடையது என்பதனால் விலை உயர்வடையும் சாத்தியங்களை மறுப்பதற்கில்லை என தெரிவிக்கப்படுகிறது.
முதல் தடவையாக வீடு கொள்வனவு செய்வோர் இந்த ஆண்டில் கொள்வனவு முயற்சிகளில் ஈடுபடலாம் என தெரிவிக்கப்படுகிறது.
முதல் தடவையாக வீடு கொள்வனவு செய்பவருக்கு பல்வேறு சலுகைகள் அறிவிக்கப்பட்டுள்ளன.
குறிப்பாக அடகு கடன் தொகையை 30 ஆண்டுகளில் செலுத்தி முடிக்க சந்தர்ப்பம் வழங்கப்பட்டுள்ளது. கடந்த காலங்களில் இந்த கால அவகாசம் 25 ஆண்டுகளாக காணப்பட்டது.
இவ்வாறு அடகு கடன் மாதாந்த கொடுப்பனவு போன்ற விடயங்களில் மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.