துப்பாக்கி சூட்டுக்கு இலக்காகி படுகாயம் அடைந்த நிலையில் வைத்தியசாலைக்கு நபர் ஒருவர் நடந்து சென்ற சம்பவம் குறித்து ரொறன்ரோ பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.
யுப்டீல் ப்ரெசென்ட் மற்றும் ஜோட்போர் அவன்யூ ஆகிய பகுதிகளில் பகுதிகளுக்கு அருகாமையில் இந்த சம்பவம் பதிவாகியுள்ளது.
குறித்த துப்பாக்கிச்சூட்டு சம்பவத்தில் குறித்த நபர் படுகாயம் அடைந்து இருந்தார் என பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
என்ன காரணத்தினால் துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டது? யாரால் நடத்தப்பட்டது? போன்ற விபரங்கள் எதனையும் பொலிஸார் வெளியிடவில்லை.
இந்த சம்பவத்தை தொடர்ந்து குறித்த பாதையை மூடப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது. சம்பவம் தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.