பாலிவுட் சினிமாவில் தனக்கென்று தனி இடத்தை பிடித்து , தற்போது தென்னிந்திய சினிமாவிலும் களமிறங்கியுள்ளார் நடிகை ஜான்வி கபூர்.
பிரபல தயாரிப்பாளர் போனி கபூர் மற்றும் மறைந்த நடிகை ஸ்ரீதேவியின் மகளான ஜான்வி கபூர், ஹிந்தி சினிமா மூலம் தனது திரைப்பயணத்தை துவங்கினார்.
தற்போது, தென்னிந்திய படங்களில் நடிக்க கவனம் செலுத்தி வருகிறார். சமீபத்தில், ஜான்வி கபூர், ஜூனியர் என் டி ஆர் நடிப்பில் வெளிவந்த தேவாரா படத்தில் கதாநாயகியாக நடித்திருந்தார்.
இப்படத்தில் அவருடைய நடனம் பெரிதளவில் பேசப்பட்டது. இதை தொடர்ந்து அடுத்ததாக ராம் சரண் படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தின் படப்பிடிப்பு தற்போது விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. விரைவில் தமிழ் படங்களிலும் ஜான்வி கபூரை காணலாம் என கூறப்படுகிறது.
இந்நிலையில், சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளியான அமரன் படம் குறித்து ஜான்வி அவரது இன்ஸ்டா பக்கத்தில் ஒரு பதிவை வெளியிட்டுள்ளார்.
அதில், " அமரன் படத்தை தாமதமாகத்தான் பார்த்தேன். ஆனால் இந்த ஆண்டு வெளிவந்த மிக சிறந்த படங்களில் அமரன் திரைப்படமும் ஒன்று. மிகவும் உணர்ச்சிப்பூர்வமாகவும் நெகிழ்ச்சியாகவும் இருந்தது" என்று பதிவிட்டுள்ளார்.