இயக்குநர் சங்கர் இயக்கத்தில் தெலுங்கு நடிகர் ராம் சரண் கதாநாயகான நடித்துள்ள படம் 'கேம் சேஞ்சர்'. இப்படத்தில் எஸ்.ஜே. சூர்யா, கியாரா அத்வானி, அஞ்சலி, ஸ்ரீகாந்த், சமுத்திரக்கனி உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். இப்படத்திற்கு தமன் இசையமைத்துள்ளார். இப்படம் மிகப்பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது.
பொங்கலை குறி வைத்து இப்படம் வருகிற 10-ந்தேதி வெளியாக உள்ளது. அதனால் தற்போது இப்படத்திற்கான புரமோஷன் பணிகள் நடைபெற்று வருகிறது.
இந்த நிலையில், இப்படத்தின் டிரைலர் தற்பொழுது படக்குழு வெளியிட்டுள்ளது. டிரெய்லர் வெளியீட்டு விழா ஐதராபாத்தில் நடைப்பெற்று வருகிறது. இந்நிகழ்ச்சியின் சிறப்பு விருந்தினராக இயக்குனர் ராஜமௌலி கலந்துக் கொண்டார். படத்தின் டிரெய்லர் காட்சிகள் தற்பொழுது இணையத்தில் வேகமாக பரவி வருகிறது.


