TamilsGuide

அருண் விஜய் நடித்த வணங்கான் படத்தின் மேக்கிங் வீடியோ வெளியீடு

பாலாவின் இயக்கத்தில் அருண் விஜய் நடிப்பில் உருவாகியுள்ள படம் வணங்கான். இந்த படத்தின் நாயகியாக ரோஷினி பிரகாஷ் நடித்துள்ளார். இயக்குனர் மிஷ்கின் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். சமுத்திரக்கனி, சண்முக ராஜன், அருள்தாஸ் ஆகியோரும் இதில் நடித்துள்ளனர்.படத்துக்கு ஜி.வி.பிரகாஷ் குமார் இசையமைத்துள்ளார். திரைப்படம் வரும் ஜனவரி 10 ஆம் தேதி வெளியாகவுள்ளது.

சமீபத்தில் படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னையில் மிக பிரம்மாண்டமாக நடைப்பெற்றது. படத்தின் முதல் பாடலான இறை நூறு மற்றும் மௌனம் போலே பாடலின் லிரிக் வீடியோவை படக்குழு வெளியிட்டது. இப்பாடல் மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது.

இந்நிலையில் படத்தின் மேகிங் வீடியோவை படக்குழு வெளியிட்டுள்ளது. அதில் அருண் விஜய் ஆக்ஷன் காட்சிகள் படமாக்கிய விதம். பாலா காட்சியமைக்கும் விதம் என காட்சிகள் அமைந்துள்ளது.
 

Leave a comment

Comment