TamilsGuide

மரக்கிளை முறிந்து வீழ்ந்ததில் கைதி ஒருவர் உயிரிழப்பு, மேலும் 11 பேர் காயம்

மாத்தறை சிறைச்சாலையில் மரக்கிளை ஒன்று கட்டிடத்தின் மீது முறிந்து வீழ்ந்ததில் 11 பேர் காயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

நேற்று (01) இரவு 10.14 மணியளவில் இடம்பெற்ற இந்த விபத்தில் 12 கைதிகள் காயமடைந்த நிலையில், மாத்தறை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் அவர்களில் ஒரு கைதி உயிரிழந்ததாகவும் தெரிவிக்கப்படுகிறது.

மிதிகம பகுதியைச் சேர்ந்த 34 வயதுடைய நபரே இவ்வாறு உயிரிழந்தவர் ஆவார்.

கைதிகள் தங்க வைக்கப்பட்டிருந்த ஜி மற்றும் எஃப் விடுதிகளின் மீது அருகில் இருந்த மரத்தின் கிளை ஒன்று விழுந்ததாக பொலிஸார் தெரிவித்தனர்.

காயமடைந்த கைதிகள் 25, 27, 32, 34, 35, 39, 41 மற்றும் 52 வயதுடைய தெனிபிட்டிய, மிரிஸ்ஸ, வெலிகம, காலி, மாத்தறை, கந்தர, படபொல, டீயெந்தர மற்றும் கல்கமுவ ஆகிய பகுதிகளில் வசிப்பவர்கள் என்று அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

விபத்தின் போது, ​​ஜி மற்றும் எஃப் விடுதிகளில் சுமார் 100 கைதிகள் தடுத்து வைக்கப்பட்டிருந்ததாகவும் தெரிவிக்கப்படுகிறது.

தற்போது மற்ற கைதிகள் அனைவரையும் வேறு கட்டிடத்தில் பாதுகாப்பாக தங்க வைக்க சிறைத்துறை அதிகாரிகள் ஏற்பாடு செய்துள்ளனர்.

சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை மாத்தறை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
 

Leave a comment

Comment