நைஜீரியாவை சேர்ந்தவர் விக்டோரியா ரோஸ். மாடல் அழகியும், நடிகையுமான இவர் சமூக வலைத்தளத்தில் கணக்கு தொடங்கி வீடியோ, போட்டோக்கள் ஆகியவற்றை பதிவேற்றி வருகிறார். இன்ஸ்டாகிராம் பிரபலமான இவரை 30 லட்சம் பேர் பின்தொடர்ந்து வருகிறார்கள்.
இந்தநிலையில் சில நாட்களுக்கு முன்பு மர்மநபர்களால் விக்டோரியா ரோஸ் கடத்தப்பட்டதாகவும், அவரை விடுதலையை செய்ய பிணை தொகையாக ரூ.8½ கோடி (1 மில்லியன் அமெரிக்க டாலர்) கேட்பது தொடர்பான பதிவுகள் சமூக வலைத்தளத்தில் வேகமாக பரவின.
இந்தநிலையில் இந்த கடத்தல் போலியானது என்பது தெரிய வந்தது. இதுதொடர்பாக விக்டோரியா ரோஸ் இன்ஸ்டாகிராம் நேரலையில் தோன்றினார். அப்போது அவர், ரசிகர்களிடம் நான் மன்னிப்பு கோருகிறேன். விளையாட்டுக்காக இந்த கடத்தல் நாடகத்தை என் சகோதரனுடன் சேர்ந்து ஏற்பாடு செய்தேன். உங்கள் அன்புக்கு நன்றி எனக்கூறினார். இதனால் அதிர்ச்சியடைந்த ரசிகர்கள் அழகியை விமர்சித்து கருத்துக்களை பதிவிட்டு அந்த வீடியோவை வைரலாக்கி வருகிறார்கள்.


