TamilsGuide

காலி முகத்திடலில் விசேட போக்குவரத்து

புத்தாண்டு கொண்டாட்டங்களை முன்னிட்டு கொழும்பு, காலி முகத்திடலை அண்மித்த பகுதிகளில் விசேட போக்குவரத்து திட்டம் அமுல்படுத்தப்படவுள்ளதாக இலங்கை காவல்துறை அறிவித்துள்ளது.

2025 ஆம் ஆண்டின் விடியலைக் கொண்டாடுவதற்காக இன்றிரவு (31), ​​பெருந்திரளான மக்கள் காலி முகத்திடலுக்கு வருகை தருவார்கள் என எதிர்பார்க்கப்படுவதாக பொலிஸார் தெரிவித்தனர்.

இதனால் கொழும்பின் புறக்கோட்டை, கோட்டை, கொம்பனி வீதி, மருதானை, கொள்ளுப்பிட்டி, பம்பலப்பிட்டி, கறுவாத்தோட்டம் உள்ளிட்ட பல பகுதிகளில் கடும் வாகன நெரிசல் ஏற்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

எனவே, போக்குவரத்தை நிர்வகிப்பதற்கான விசேட போக்குவரத்து திட்டம் அமுல்படுத்தப்படும் என தெரிவித்த பொலிஸார், இன்று காலி முகத்திடலுக்கு அருகில் வாகனங்களை நிறுத்துவதற்கு பொதுமக்களுக்கு அனுமதி வழங்கப்பட மாட்டாது என்றும் கூறினர்.

எவ்வாறெனினும், மேற்குறிப்பிட்ட பகுதிகளில் இலவச அல்லது தனியார் வாகன நிறுத்துமிடங்களில் வாகன நிறுத்தம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதுடன், காலி முகத்திடலுக்கு வருகை தரும் பொது மக்கள் அவற்றைப் பயன்படுத்துமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.
 

Leave a comment

Comment