TamilsGuide

கொழும்பு நகரில் இன்று முதல் விசேட பாதுகாப்பு வேலைத்திட்டம்

கொழும்பு நகரில் இன்று முதல் எதிர்வரும் 2ஆம் திகதி வரை விசேட பாதுகாப்பு வேலைத்திட்டம் அமுல்படுத்தப்பட்டுள்ளது.

அதன்படி பாதுகாப்பு பணிகளுக்காக 6000க்கும் அதிகமான பொலிஸார் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் புத்திக மனதுங்க தெரிவித்துள்ளார்.

பொலிஸ் அதிகாரிகளுக்கு மேலதிகமாக, புலனாய்வு அதிகாரிகளும் இதற்காக பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

மக்கள் புத்தாண்டுயிட்டு , கொழும்பு மற்றும் அதன் புறநகர் பகுதிகளில் அதிகமாக பயணம் மேற்கொள்வதால் அவர்களின் பாதுகாப்பிற்காக இந்த பாதுகாப்பு திட்டம் அமுல்படுத்தப்பட்டுள்ளது என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்
 

Leave a comment

Comment