TamilsGuide

கனடாவில் இடம்பெற்ற வினோத சம்பவம்

கனடாவில் வங்கிக் கொள்ளையில் ஈடுபட முயற்சித்த நபரின் சைக்கிள் களவாடப்பட்டுள்ளது. கனடாவின் ஹமில்டன் பகுதியில் இந்த வங்கிக் கொள்ளை முயற்சி இடம்பெற்றுள்ளது.

மொன்றியல் வங்கியின் கிளையொன்றில் புகுந்த நபர் ஒருவர் வங்கிப் பணியாளரை அச்சுறுத்தி பணம் கொள்ளையிட முயற்சித்துள்ளார்.

துப்பாக்கி இருப்பதாகக் கூறி குறித்த வங்கிப் பணியாளரை அச்சுறுத்தியுள்ளார்.

இதன் போது சக வங்கிப் பணியாளர்கள் குறித்த கொள்ளையரை தடுக்க முயற்சித்துள்ளனர்.

இந்த சம்பவத்தின் போது கொள்ளையரினால் பணம் கொள்ளையிட முடியவில்லை எனவும் வெறும் கையுடன் வங்கியை விட்டு தப்பிச் சென்றதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

சைக்கிள் ஒன்றில் வங்கியில் கொள்ளையிட சென்றிருந்த குறித்த நபர், வெளியே நிறுத்தியிருந்த சைக்கிளை தேடியுள்ளார். எனினும், குறித்த சைக்கிளை வேறும் ஒருவர் களவாடிச் சென்றுள்ளார்.

இதனால் குறித்த வங்கிக் கொள்ளையர் கால் நடையாகவே சம்பவ இடத்தை விட்டு தப்பிச் சென்றுள்ளார்.

வங்கிக் கொள்ளையில் ஈடுபட முயற்சித்த நபர் மற்றும் சைக்கிளை கொள்ளையிட்ட நபர் ஆகியோரை பொலிஸார் தேடி வருகின்றனர். 
 

Leave a comment

Comment