TamilsGuide

மூன்று பாகங்களாக உருவாக இருக்கும் வெற்றிமாறன் - சூர்யா வாடிவாசல்

நடிகர் சூர்யா அடுத்ததாக கார்த்தி சுப்பராஜ் இயக்கத்தில் சூர்யா 44 திரைப்படத்தில் நடித்துள்ளார். தற்பொழுது ஆர்.ஜே பாலாஜி இயக்கத்தில் சூர்யா 45 திரைப்படத்தில் நடித்து வருகிறார்.

அதை தொடர்ந்து இயக்குனர் வெற்றிமாறன் இயக்கத்தில் 'வாடிவாசல்' திரைப்படத்தில் சூர்யா நடிக்கவுள்ளார். இப்படத்திற்கு ஜி.வி.பிரகாஷ் இசையமைக்கிறார். ஜல்லிக்கட்டை மையப்படுத்தி உருவாகும் இந்த படத்திற்காக மாடுபிடி வீரர்களுடன் சூர்யா பயிற்சி மேற்கொள்ளும் வீடியோ கடந்த சில மாதங்களுக்கு முன்பு படக்குழு வெளியிட்டது.

வெற்றிமாறன் இயக்கத்தில் சமீபத்தில் விடுதலை 2 திரைப்படம் வெளியாகி மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. இதற்கு அடுத்து வெற்றிமாறன் வாடிவாசல் திரைப்படத்தை இயக்குவார் என எதிர்ப்பார்க்கப்படுகிறது. சூர்யாவும் 45 திரைப்படத்தை தொடர்ந்து இப்படத்தில் நடிக்கவுள்ளார் என எதிர்ப்பார்க்கப்படுகிறது. திரைப்படத்தின் ப்ரீ ப்ரொடக்ஷன் பணிகள் தீவிரமாக நடைப்பெற்று வருகிறது.

இந்நிலையில் திரைப்படம் மூன்று பாகங்களாக உருவாக இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. இதற்கான கதை மற்றும் திரைக்கதையை வெற்றிமாறன் எழுதியுள்ளதாக கூறப்படுகிறது. இதைக்குறித்த அதிகாரப்பூர்வ தகவல் விரைவில் வெளியாகும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.
 

Leave a comment

Comment