கடந்த 2021-ம் ஆண்டு லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடிப்பில் வெளிவந்த படம் 'மாஸ்டர்'. இப்படத்தில் வில்லனாக விஜய் சேதுபதி அனைவரையும் மிரட்டினார். இப்படத்தில் நாயகியாக மாளவிகா மோகனன் நடித்திருந்தார். மேலும், நாசர், அர்ஜூன் தாஸ், ஆண்ட்ரியா, சாந்தனு, சஞ்சீவ், ஸ்ரீநாத், தீனா உள்ளிட்ட பலரும் நடித்திருந்தனர். அனிருத் இப்படத்திற்கு இசையமைத்தார்.
இப்படம் வெளியாகி ரசிகர்களிடையே பெரும் வரவேற்பை பெற்றது. மேலும் இப்படத்தின் முதல் பாடலான விஜய் பாடிய 'குட்டி ஸ்டோரி' என்ற பாடல் ரசிகர்களின் அமோக வரவேற்பை பெற்றது.
இந்த நிலையில், பிறக்கப்போகும் ஆங்கில புத்தாண்டையொட்டி 'மாஸ்டர்' ரீ-ரிலீஸ் செய்யப்படுகிறது. இதனால் ரசிகர்கள் உற்சாக மிகுதியில் உள்ளனர்.
சமீபகாலமாக ரசிகர்களின் வரவேற்பை பெற்ற படங்கள் ரீ-ரிலீஸ் செய்யப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.