TamilsGuide

அழகான பயணத்துடன் இந்தாண்டு தொடங்கி முடிவடைந்துள்ளது - ஆதிக் ரவிச்சந்திரன் நெகிழ்ச்சி

கடந்த ஆண்டு ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் வெளிவந்த மார்க் ஆண்டனி மிகப்பெரிய ஹிட் அடித்தது. அப்படத்தில் விஷால், எஸ்.ஜே.சூர்யா ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்தனர்.

இதைத்தொடர்ந்து அஜித் நடிக்கும் குட் பேட் அக்லி திரைப்படத்தை ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கியுள்ளார். இப்படத்தில் அஜித் மூன்று கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். திரைப்படத்தில் திரிஷா கதாநாயகியாக நடித்துள்ளார்.

இப்படத்தில் நடிகர் பிரசன்னா, அர்ஜூன் தாஸ் மற்றும் யோகி பாபு ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகின்றனர். சமீபத்தில் ஆதிக் ரவிச்சந்திரன் அவரது எக்ஸ் தளத்தில் பதிவிட்ட அஜித்தின் புகைப்படங்கள் மிகவும் வைரலானது.

குட் பேட் அக்லி படத்தில் அஜித்தின் படப்பிடிப்பு நிறைவடைந்த நிலையில் இன்று படத்தின் டப்பிங் பணிகளை தொடங்கியுள்ளார் அஜித்.

இதுக்குறித்து ஒரு நெகிழ்ச்சியான பதிவை ஆதிக் அவரது எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார். அதில் அவர் " ஒவ்வொரு வருடமும் நான் தியேட்டரில் உங்கள் குரலை கேட்பதற்காக ஆர்வமாக இருப்பேன். இப்பொழுது இந்த கடவுள், பிரபஞ்சம் உங்கள் குரலை என்னை டப்பிங் பணியில் கேட்க வைத்துள்ளது. இந்த வருடம் சிறப்பாக தொடங்கி சிறப்பாக முடிந்துள்ளது. குட் பேட் அக்லி திரைப்படத்தின் நினைவுகளை நான் என்றும் பொக்கிஷமாக பாதுக்காப்பேன். நான் எப்பொழுதும் உங்களுக்கு நன்றியுடைவன். லவ் யூ சார்" என பதிவிட்டுள்ளார்.
 

Leave a comment

Comment