TamilsGuide

செல்ஃபி எடுத்துக்கட்டுமா என்று விஜய் கேட்டார்.. இயக்குநர் பாலா

தமிழ் திரையுலகில் முன்னணி இயக்குநர் பாலா. இவர் இயக்கிய படங்கள் தேசிய விருது வென்றுள்ளன. மேலும், விமர்சன ரீதியில் பெரும் வரவேற்பை பெற்றுள்ளன. அந்த வகையில், இயக்குநர் பாலா நீண்ட இடைவெளிக்கு பிறகு இயக்கியிருக்கும் புதிய படம் "வணங்கான்."

வருகிற பொங்கல் பண்டிகையை ஒட்டி வெளியாக இருக்கும் வணங்கான் படத்தில் அருண் விஜய் முதன்மை கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். வணங்கான் வெளியீட்டைத் தொடர்ந்து இயக்குநர் பாலா சமீபத்தில் பேட்டி அளித்தார். அதில் நடிகர் விஜய் பற்றி கருத்து தெரிவித்துள்ளார்.

அப்போது பேசிய அவர், "விஜயை எனக்கு மிகவும் பிடிக்கும். தற்போது இதை கேட்பதால், ஒரு சம்பவத்தை பதிவு செய்கிறேன். ஒரு முறை நான், என் குழந்தை மற்றும் நடிகர் விஜய், அவரது மனைவி சந்தித்தும். அங்கு என் குழந்தை அவருடன் விளையாடிக் கொண்டு இருந்தது.

என் குழந்தையுடன் செல்ஃபி எடுக்க கேமராவை ஆன் செய்துவிட்டார் விஜய். எனினும் ஒரு செல்ஃபி எடுத்துக் கொள்ளட்டுமா என்று என்னிடம் அனுமதி கேட்டார். இந்த மாதிரி ஒழுக்கமான நபரை நான் எதற்காக அவமானப்படுத்த வேண்டும்," என்று கூறினார்.
 

Leave a comment

Comment