TamilsGuide

சல்மான் கான் நடித்த சிக்கந்தர் படத்தின் டீசர் நாளை வெளியீடு

ஏ.ஆர் முருகதாஸ் அடுத்ததாக சிவகார்த்திகேயன் நடிப்பில் எஸ்கே 23 திரைப்படத்தை இயக்கியுள்ளார். இப்படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ளார். படத்தில் வித்யூத் ஜம்வல் வில்லனாக நடித்துள்ளார். திரைப்படத்தின் தலைப்பு மட்டும் கதைக்களத்தை பற்றி அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகவில்லை.

அதே சமயம் பாலிவுட் நடிகர் சல்மான் கானை வைத்து ஏ.ஆர்.முருகதாஸ் சிக்கந்தர் என்ற இந்தி படத்தை இயக்கியுள்ளார். இப்படத்தை பிரபல தயாரிப்பாளர் சஜித்நதியத்வாலா தயாரிக்கிறார்.மேலும் சல்மான்கான் 10 ஆண்டுகளுக்கு பிறகு தயாரிப்பாளர் சஜித் நதியத்வாலாவுடன் இணைந்து உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. படத்தின் நாயகியாக ராஷ்மிகா மந்தனா நடித்துள்ளார். திரைப்படம் அடுத்தாண்டு ரம்ஜான் பண்டிகையை ஒட்டி வெளியாகவுள்ளது.

இந்நிலையில் சல்மான் கான் பிறந்தநாளை முன்னிட்டு படத்தின் டீசரை நாளை காலை 11.07 மணிக்கு வெளியிடவுள்ளது. இன்று டீசர் வெளியாக இருந்த சூழ்நிலையில் ஏதோ ஒரு காரணத்தினால் இன்று வெளியாகவில்லை.
 

Leave a comment

Comment