TamilsGuide

இணையவழி நிதி மோசடிகள் அதிகரிப்பு

கிறிஸ்துமஸ் மற்றும் புதுவருடப் பிறப்பு பண்டிகைக் காலத்தை இலக்கு வைத்து இணையவழி நிதி மோசடிகள் அதிகரித்து வருவதாக இலங்கை கணினி அவசர தயார்நிலைக் குழு (SLCERT) எச்சரித்துள்ளது.

இக்காலப் பகுதியில் பரிசுகளை வென்றதாகக் கூறி அழைப்புகளைப் பெறுவதன் மூலம் பொதுமக்கள் நிதி ரீதியாக ஏமாற்றப்படுவதாக முறைப்படுகள் கிடைத்துள்ளதாக SLCERT இன் முதன்மை தகவல் பாதுகாப்பு அதிகாரி நிரோஷ் ஆனந்த தெரிவித்துள்ளார்.

செயற்கை நுண்ணறிவு (AI) தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி சில மோசடிகள் நடப்பதாகவும் முறைப்பாடுகள் வந்துள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார்.

எனவே, இதுபோன்ற இணையவழி நிதி மோசடிகள் குறித்து பொதுமக்கள் விழிப்புடன் இருக்குமாறும் அவர் கேட்டுக் கொண்டார்.
 

Leave a comment

Comment