TamilsGuide

மக்களுக்கு நட்புறவான சேவைகளை மகிழ்ச்சியாக வழங்குவதே நோக்கம் – புகையிரத திணைக்களம்

இலங்கை புகையிரத திணைக்களத்தின்  (GMR) புதிய பொது முகாமையாளராக இன்று கடமைகளைப் பொறுப்பேற்றுக்கொண்ட தம்மிக ஜயசுந்தர, புகையிரத திணைக்களம் மக்களுக்கு மகிழ்ச்சியையும், மக்களையும் வழங்கும் நிறுவனமாக மாற்றப்பட வேண்டுமென தெரிவித்தார்.

அத்துடன் ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த அவர், இலங்கை புகையிரத திணைக்களத்திற்கான புகையிரத பொது முகாமையாளராக (GMR) தன்னை மீண்டும் நியமித்தமைக்காக அமைச்சரவை அமைச்சர்களுக்கு நன்றி தெரிவித்தார்.

மேலும் “மக்களின் வாழ்வாதாரத்திற்கு இன்றியமையாத நிறுவனமாக புகையிரத திணைக்களம் உள்ளது. அரசின் புதிய கொள்கைகளின்படி, தினசரி பயணத்தை எளிதாக்கும் வகையில் ரயில் பயன்பாட்டை 70% அதிகரிக்க திட்டம் உள்ளது,” என்றார்.

இந் நிலையில்  புகையிரத திணைக்களத்தில் நிலவும் பிரச்சினைகளை ஏற்றுக்கொண்ட அவர், அவற்றை விரைவில் தீர்த்து வைப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதியளித்தார்.
 

Leave a comment

Comment