TamilsGuide

கனடாவில் நண்பர்களுக்கு கிட்டிய அதிர்ஷ்டம்

கனடாவின் பிரிட்டிஷ் கொலம்பிய மாகாணத்தில் நண்பர்கள் இருவர் லொத்தர் சீட்டிலுப்பில் வெற்றியை பதிவு செய்துள்ளனர்.

வாங்கூவரைச் சேர்ந்த வேய் ஹிங் யுவென் மற்றும் டாங்க் மீ டேங்க் ஆகியோர் இவ்வாறு பரிசு வென்றுள்ளனர். கடந்த 11ஆம் திகதி சீட்டிலுப்பு நடத்தப்பட்டுள்ளது.

இந்த சீட்டிலுப்பில் ஒரு மில்லியன் டொலர்களை வெற்றியீட்டியுள்ளனர்.

இந்த நண்பர்கள் நீண்ட காலமாக ஒன்றாக இணைந்து லொத்தர் சீட்டிலுப்பில் பங்கேற்று வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

லொத்தர் சீட்டில் பரிசு கிடைக்கப்பெற்றமையை முதலில் நம்பவில்லை எனவும் பின்னர் இருவரும் அதனை உறுதி செய்து கொண்டதாகவும் தெரிவித்துள்ளனர். 

Leave a comment

Comment