TamilsGuide

விஜயை நேரில் சந்தித்து வாழ்த்து பெற்ற அலங்கு படக்குழு

தமிழக - கேரள எல்லைப் பகுதியில் மருத்துவ கழிவுகளில் ஆரம்பித்து விலங்குகள் எச்சம் கழிவுகள் வரை கொட்டப்பட்டு வருவதை தினசரி செய்தியாக பார்த்துக் கொண்டு வருகிறோம். இந்த கழிவுகளால் என்னென்ன ஆபத்து ஏற்படுகிறது என்ற உண்மைச் சம்பவத்தை மையமாக வைத்து 'அலங்கு' என்ற திரைப்படம் உருவாகியுள்ளது.

வருகிற டிசம்பர் 27ம் தேதி அலங்கு திரைப்படம் வெளியாக இருக்கும் நிலையில், இந்தப் படத்திற்கு நடிகர் விஜய் வாழ்த்து தெரிவித்துள்ளார். பட ரிலீசை ஒட்டி படக்குழுவினர் நடிகர் விஜயை நேரில் சந்தித்து, படத்தின் டிரெய்லரை காண்பித்துள்ளனர். மேலும், விஜயுடன் படக்குழு உரையாடியுள்ளனர்.

இதன் பிறகு புத்தகம் ஒன்றில் கையெழுத்திட்ட நடிகர் விஜய், "அலங்கு படக்குழுவுக்கு வாழ்த்துக்கள், பிரியமுடன் விஜய்" என குறிப்பிட்டுள்ளார். இது தொடர்பான புகைப்படம் மற்றும் வீடியோக்கள் சமூக வலைதளங்களில் அதிகம் பகிரப்படுகிறது.

அலங்கு திரைப்படம் புலம்பெயர்ந்து தொழில் செய்யும் பழங்குடியினரின் வாழ்க்கையை பதிவு செய்யும் வகையில் உருவாக்கப்பட்டு இருக்கிறது. இந்தப் படத்தை S.P. சக்திவேல் இயக்கியுள்ளார். இவர் ஏற்கனவே 'உறுமீன்', 'பயணிகள் கவனிக்கவும்' படங்களை இயக்கியுள்ளார். ஆக்சன் த்ரில்லர் டிராமாவாக உருவாகி இருக்கும் இத்திரைப்படத்தில் முதன்மை கதாபாத்திரத்தில் கதை நாயகனாக குணாநிதி நடித்துள்ளார்.

டிசம்பர் 27ம் தேதி வெளியாக இருக்கும் நிலையில் அலங்கு படத்தின் டிரெய்லரை நடிகர் ரஜினிகாந்த் அவரது எக்ஸ் பக்கத்தில் வெளியிட்டு இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
 

Leave a comment

Comment