TamilsGuide

கனடா தொடர்பில் மீண்டும் சர்ச்சையை கிளப்பும் டிரம்ப் தரப்பு

கனடா தொடர்பில் அண்மை காலமாக அமெரிக்காவின் புதிய ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் தரப்பு பல்வேறு சர்ச்சைக்குரிய கருத்துக்களை வெளியிட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

அண்மையில் கனடாவை அமெரிக்காவின் 51 வது மாநிலமாக அறிவிக்க வேண்டும் என டிராம்ப் கருத்து வெளியிட்டிருந்தார்.

அந்த வகையில் ட்ரம்பின் புதல்வர் கனடா தொடர்பில் சர்ச்சைக்குரிய கருத்தை வெளியிட்டுள்ளார்.

அமெரிக்கா புதிய ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் கனடா, கிரீன்லாந்து, பணமா கால்வாய் போன்றவற்றை அமேசன் தளத்தில் கொள்வனவு செய்தது போன்று ஓர் பதிவொன்றை இட்டுள்ளார்.

தனது அதிகாரப்பூர்வ எக்ஸ் தளத்தில் இந்த பதிவு இட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

போலியாக வடிவமைக்கப்பட்ட புகைப்படம் ஒன்றில் இந்த தகவல் உள்ளிடப்பட்டுள்ளது. கனடாவின் பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோவை, ட்ரம்ப் தரப்பினர் கனடிய ஆளுநர் என விவரிக்க தொடங்கியுள்ளமை பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.

ஏற்கனவே கனடா மீது பெருந்தொகை வரி விதிக்கப்படும் என ட்ரம்ப் தரப்பு எச்சரிக்கை விடுத்துள்ள பின்னணியில் இந்த சமூக ஊடகப் பதிவு மேலும் சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது. 

Leave a comment

Comment