இந்த நத்தார் பண்டிகை காலப்பகுதியில் கனடியர்களுக்கு சீரற்ற காலநிலை தொடர்பில் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
நத்தார் பண்டிகை தினமன்று ஐந்து முதல் 15 சென்டி மீட்டர் வரையில் பனிப்பொழிவு ஏற்படும் என எதிர்வு கூறப்பட்டுள்ளது.
கனடிய சுற்றாடல் திணைக்களம் இது தொடர்பான எதிர்வு கூறல்களை வெளியிட்டுள்ளது.
காலை முதல் மாலை வரையில் தொடர்ச்சியாக பனிப்பொழிவு நிலைமையை அவதானிக்க முடியும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
சில நேரங்களில் கடுமையான பனிப்பொழிவு ஏற்படலாம் எனவும் எதிர்வு கூறப்பட்டுள்ளது.
மாலை நேர போக்குவரத்து பாதிக்கப்படும் எனவும் எதிர்வு கூறப்பட்டுள்ளது.


