TamilsGuide

பி.வி. சிந்து திருமண வரவேற்பில் குடும்பத்துடன் கலந்து கொண்ட அஜித் குமார்

இந்தியா சார்பில் ஒலிம்பிக்கில் பங்கேற்று 2 முறை பதக்கம் வென்று நாட்டுக்கு பெருமை சேர்த்த பேட்மிண்டன் வீராங்கனை பி.வி. சிந்து. முன்னாள் உலக சாம்பியனான பி.வி. சிந்துவிற்கும் வெங்கட தத்தா சாய் என்பவருக்கும் ராஜஸ்தான் மாநிலம் உதய்பூரில் குடும்பத்தினர் மற்றும் நண்பர்களின் முன்னிலையில் திருமணம் நடைபெற்றது.

இதைத் தொடர்ந்து ஐதராபாத்தில் இவர்களின் திருமண வரவேற்பு நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் தமிழ் திரையுலகின் முன்னணி நடிகர் அஜித் குமார் தனது குடும்பத்துடன் கலந்து கொண்டுள்ளார்.

பி.வி. சிந்து திருமண வரவேற்பில் அஜித் குமார் கலந்து கொண்ட புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் அதிகம் பகிரப்படுகின்றன. 
 

Leave a comment

Comment