TamilsGuide

அதிக வசூல் செய்த இந்தி திரைப்படமாக அல்லு அர்ஜுனின் புஷ்பா 2 சாதனை படைத்துள்ளது

இயக்குநர் சுகுமார் மற்றும் நடிகர் அல்லு அர்ஜுன் கூட்டணியில் உருவாகி இருக்கும் திரைப்படம் 'புஷ்பா 2 தி ரூல்'. இந்த படத்தில் ராஷ்மிகா மந்தனா, ஃபகத் ஃபாசில் உட்பட பலர் நடித்துள்ளனர். இந்த படத்திற்கு தேவி ஸ்ரீ பிரசாத் இசையமைத்துள்ளார். பின்னணி இசையை சாம் சி.எஸ். உருவாக்கி இருக்கிறார்.

பான் இந்தியா வெளியீடாகத் தமிழ், இந்தி, மலையாளம், கன்னட மொழிகளில் கடந்த டிசம்பர் 5 ஆம் தேதி வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்று கொண்டாடப்பட்டு வருகிறது.

'புஷ்பா 2' முதல் நாள் வசூலாக 294 கோடி ரூபாய் வசூல் செய்துள்ளதாகவும், இதுவரை இந்தியன் சினிமாவில் முதல் நாள் வசூலித்தது இப்படத்தின் வசூலே அதிகம் என்று தகவல் வெளியானது. தற்போது வரை திரைப்படம் உலகளவில் 1500 கோடி ரூபாயை வசூலித்துள்ளது.

இந்நிலையில் திரைப்படம் இந்தி மொழியில் மட்டும் 645 கோடி ரூபாய் 16 நாட்களில் வசூலித்து சாதனை படைத்துள்ளது. இதுவரை எந்த திரைப்படமும் இந்தி மொழியில் இவ்வளவு வசூலித்ததில்லை என்பது குறிப்பிடத்தக்கது. இதுவரை இந்தியின் பிளாக்பஸ்டர் திரைப்படமான ஸ்ரீ 2 , ஜவான், பதான், பாகுபலி 2, அனிமல் மற்றும் கேஜிஎஃப் 2 திரைப்படங்களின் இந்தி வசூலைவிட இப்படம் அதிகமாக வசூலித்துள்ளது.

இதனால் புஷ்பா 2 இந்தி மொழியில் மட்டும் 3டி தொழில்நுட்பத்துடன் படக்குழு வெளியிட்டுள்ளது. 
 

Leave a comment

Comment