TamilsGuide

போதைப்பொருளுடன் ரஷ்ய நாட்டவர் கைது

“குஷ்” என்ற போதைப்பொருளை கடத்த முற்பட்ட நபர் ஒருவர் நேற்று (23) கட்டுநாயக்க, பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் வைத்து பொலிஸ் போதைப்பொருள் தடுப்புப் பிரிவின் (PNB) அதிகாரிகளால் கைது செய்யப்பட்டுள்ளார்.

இவரிடமிருந்து கைப்பற்றப்பட்ட போதைப்பொருளின் பெறுமதி 10 மில்லியன் ரூபா என மதிப்பிடப்பட்டுள்ளது.

சந்தேக நபர், 34 வயதான ரஷ்ய நாட்டவர் என்றும் அவர் நாட்டில் தகவல் தொழில்நுட்ப நிபுணராக பணிபுரிந்தவர் என்றும் ஆரம்பக் கட்ட விசாரணையில் கண்டறியப்பட்டுள்ளது.

இது தொடர்பான மேலதிக விசாரணைகளை பொலிஸ் போதைப்பொருள் தடுப்புப் பிரிவு அதிகாரிகள் மேற்கொண்டு வருகின்றனர்.
 

Leave a comment

Comment