TamilsGuide

ஜனாதிபதி அலுவலக வளாகத்தில் இரண்டாம் நாளாகவும் கிறிஸ்மஸ் கரோல் கீதம் இசைக்கும் நிகழ்வு

ஜனாதிபதி அலுவலக வளாகத்தில் முப்படையினரும் பொலிஸாரும் இணைந்து வருடாந்தம் நடத்தும் விசேட கிறிஸ்மஸ் கரோல் கீதம் இசைக்கும் நிகழ்வு ஜனாதிபதி அலுவலக வளாகத்தில் நடைபெற்றதுள்ளது

ஜனாதிபதி அலுவலக வளாகம் மற்றும் அண்டிய பகுதிகளில் மின் விளக்கேற்றி கிறிஸ்மஸ் கரோல் கீதங்களை இசைக்கும் நிகழ்வு நேற்று இரண்டாவது நாளகவும் ஆரம்பிக்கப்பட்டிருந்ததுடன், நேற்றைய தினம் இலங்கை விமானப்படை இசை மற்றும் வாத்திய குழுவினரால் கிறிஸ்மஸ் கரோல் கீதம் இசைக்கப்பட்டது.

அத்துடன் இன்று இலங்கை விமானப்படையின் இசை மற்றும் வாத்திய குழு கிறிஸ்மஸ் கரோல் கீதங்கள் இசைக்கக்கப்படவுள்ளன.

மேலும் இந்த கிறிஸ்மஸ் கரோல் கீதம் இசைக்கும் நிகழ்வு டிசம்பர் 25 ஆம் திகதி வரை தினமும் இரவு 7.00 மணிக்கு ஜனாதிபதி அலுவலக வளாகத்தில் நடைபெறவுள்ளமையும் குறிப்பிடத்தக்கது 
 

Leave a comment

Comment