TamilsGuide

இயக்குனர் கே.பாலச்சந்தரை நினைவுகூர்ந்த கமல்ஹாசன்

தமிழ் சினிமாவில் இயக்குனர் சிகரம் என்று அன்போடு அழைக்கப்படுவர் கே. பாலச்சந்தர். 80-90களின் தமிழ் திரையுலகை தீர்மானித்த முக்கிய முன்னணி நடிகர்களான ரஜினிகாந்த் மற்றும் கமல்ஹாசன் ஆகிய இரு துருவ போட்டி நடிகர்களை அறிமுகம் செய்தவர்.

அது மட்டுமின்றி தமிழ் திரையுலகில் பின்னாளில் அசாத்திய வில்லன் நடிகர்களான நாசர், பிரகாஷ் ராஜ் மற்றும் தனது நகைச்சுவையால் பலரையும் சிந்திக்க வைத்த நகைச்சுவை நடிகர் விவேக் அனைவரையும் அறிமுகம் செய்ததே பாலசந்தர் தான்.

தமிழ் சினிமாவில் மட்டுமின்றி பிற மொழிகளிலும் பலரை அறிமுகப்படுத்திய இயக்குனர் கே.பாலச்சந்தரின் நினைவு தினம் இன்று அனுசரிக்கப்படுகிறது.

இதையொட்டி, நடிகர் கமல்ஹாசன் எக்ஸ் தள பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில், எத்தனை படங்கள்... அத்தனையும் பாடங்கள். பள்ளியாகவும் பல்கலைக்கழகமாகவும் திகழ்ந்து பயிற்றிப் பல கல்வி தந்த ஆசான் கே.பாலசந்தரின் நினைவு நாள் இன்று. அவரிடம் பயின்றவை என்றும் என் நினைவில் நிற்கும். என்னை வழி நடத்தும். அவர் புகழ் நிலைக்கும் என பதிவிட்டுள்ளார். 

Leave a comment

Comment